சென்னை: 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் சாதிக்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எந்த அளவுக்கு ஓரவஞ்சனையுடன் ஒன்றிய அரசு அணுகுகிறது என்பது சொல்ல தேவையில்லை. செயற்கையான நிதிச்சுமையை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை. எல்லார்க்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. எந்த குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களில் ஒருவராவது அரசின் திட்டத்தால் பயனடைந்திருப்பார்கள் என்று கூறினார்,
