×

ஈரோட்டில் திண்டல் வேலாயுதசாமி கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்: ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்கேற்பு

ஈரோடு: திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் நேற்று நடை​பெற்ற கும்​பாபிஷேக விழாவில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். ஈரோடு திண்டல்​மலை வேலா​யுத சுவாமி கோயி​லில் ராஜகோபுரம், சிவன் மற்​றும் அம்​மன் சந்​நி​தி​கள், பரி​வார சந்​நி​தி​கள், புதிய நுழை​வா​யில் கட்​டு​தல் உள்​ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்​பணி​கள் நிறைவடைந்த நிலை​யில், கடந்த 16-ம் தேதி கும்​பாபிஷேக விழா தொடங்​கியது.

இதனையடுத்து தின​மும் சிறப்பு பூஜைகள், ஹோமங்​கள் நடை​பெற்​றன. நேற்று காலை 6 காலயாக பூஜைக்​குப் பிறகு மகா கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. ஸ்ரீவேலா​யுதசு​வாமி, அபி​ராமி அம்​மன் உடனமர் அமிர்த கடேஸ்​வரர், மூலஸ்​தான விமானம், பரி​வார விமானம், ராஜகோபுரம் மற்​றும் மூலஸ்​தான தெய்​வங்​களுக்கு புனித நீர் ஊற்றி கும்​பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘அரோக​ரா’ முழக்​கத்​துடன் வழிபட்​டனர். விழா​வில், அமைச்​சர்​கள் சு.​முத்​து​சாமி, பி.கே.சேகர்​பாபு, மாவட்ட ஆட்​சி​யர் ச.கந்​த​சாமி, எம்​எல்​ஏ-க்​கள் வி.சி.சந்​திரகு​மார், சரஸ்​வ​தி, அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் பரஞ்​சோதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

எஸ்​.பி. சுஜாதா தலை​மை​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. சட்​டப்​பேர​வைக் கூட்​டத் தொடரில் திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் 207 அடி உயர முரு​கன் சிலை அமைக்​கப்​படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்​நிலை​யில், நேற்று ரூ.18 கோடி மதிப்பில் 207 அடி உயர முரு​கன் சிலை அமைக்​கும் பணி​களுக்கு அமைச்​சர்​கள் முத்​து​சாமி, சேகர்​பாபு ஆகியோர் அடிக்​கல் நாட்​டினர்.

 

Tags : Kudarukku Ceremony ,Dindal Velayudasamy Temple ,Erode ,Kumbapisheka ,Tindal Velayuda Swami Temple ,Dindalmalai Velayuda Swami Temple ,Rajakopura ,Sivan ,Amman Channidhas ,Parivara Chanditha ,
× RELATED ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும்...