×

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவார்: ஆதவ் அர்ஜுனா பேச்சு

 

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என ஆதவ் அர்ஜுனா கூறினார். தமிழக வெற்றி கழகத்தின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் வியாசர்பாடி பகுதியில் நேற்று நடந்தது. இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
எதற்கு சென்னை பெரம்பூர் பகுதியில் முதல் கூட்டம் கூட்டுகிறோம் என தெரியுமா, குறுகிய காலத்தில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 40 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்துள்ளனர்.

வடசென்னையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதனை எல்லாம் தீர்க்க வேண்டும். அறிக்கை விடுவது, டிவிட் போடுவது, திடீரென்று போர்டை பிடித்துக் கொண்டு போராடுவது எல்லாம் எங்கள் தலைவருக்கு பிடிக்காது. பெரம்பூரில் முதல் கூட்டம். இன்றிலிருந்து சென்னை தவெகவின் கோட்டை. நமது தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என இந்த நேரத்தில் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதை பொதுச் செயலாளர் வழிமொழிவார் என நம்புகிறேன் என்றார்.

பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி என்றாலே தனிச்சிறப்பு உள்ளது. உழைக்கும் தொகுதி இதுதான். இந்த தொகுதியில் நமக்கு 44 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 1810 நிர்வாகிகள் உள்ளனர். ஆதவ் அர்ஜுனா கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் எல்லோரும் மனதார வரவேற்கிறோம். உங்களுடைய விருப்பத்தை மேலே சொல்கிறோம். இதேபோல் 234 தொகுதிகளிலும் தோழர்கள் எழுச்சியோடு இருக்க வேண்டும்’’ என பேசினார்.

 

Tags : Vijay ,Perambur ,Adhav Arjuna ,Chennai ,TTV ,Tamil Nadu Victory Party ,Vyasarpadi ,General Secretary ,Pussy Anand ,
× RELATED பாஜ சிறுபான்மை அணி மாநில மாநாட்டை புறக்கணித்த தொண்டர்கள்