- தேமுதிக
- திமுக
- காதர் மொஹிதீன்
- சென்னை
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய
- ஜனாதிபதி
- கே.எம். காதர் மொஹிதீன்
- அண்ணா
- அரிவாளயம்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அளித்த பேட்டி: கடந்த முறை எங்களுக்கு மூன்று தொகுதிகளை வழங்கினர். தோழமைக் கட்சிகள் வலிமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் 2, 3 கட்சிகளை இணைத்தால் நன்றாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் தேமுதிகவை இணைத்திருக்கிறோம். வேறு சில கட்சிகளையும் இணைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். சென்ற முறை திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் ஒரு சில இடங்களை குறைத்துக்கொண்டால் தான் அவர்களையும் இணைத்து சீட்டுகள் வழங்க முடியும். திமுகவும் போட்டியிட்ட சில தொகுதிகளை தானம் செய்ய இருக்கிறோம். அந்த அடிப்படையில் வருகின்ற கட்சிகளையும் திருப்திப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர். சென்ற முறை உங்களுக்கு 3 தொகுதிகளை கொடுத்தோம். நாங்களும் குறைக்கிறோம், கூட்டணிக் கட்சியில் இருக்கிறவர்களை கேட்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் கடந்த முறை உங்களுக்கு 3 தொகுதிகளை வழங்கினோம்.
அதில் ஒன்றை தானம் செய்ய கேட்டுக் கொள்கிறோம் என்ற கருத்தையும் தெரிவித்தனர். நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்தோம். கூட்டணியில் இடம்பெற்ற எல்லா கட்சிகளையும் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். நாங்கள் எதையும் இன்னும் முடிவு செய்யவில்லை. கலந்தாலோசித்து சொல்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். திமுக தலைமையிலான கூட்டணியில் நேற்றும் இருந்தோம்; இன்றும் இருக்கிறோம்; நாளையும் இருக்கிறோம்; இதில் எந்த சந்தேகமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு எல்லா இடங்களிலும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் கேட்போம். எங்கள் சின்னம் ஏணி சின்னம்தான் அந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம். தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. சின்னம் இல்லாதவர்கள் தான் வேறு சின்னத்தில் போட்டியிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
