- ஆம்பூர் பிரியாணி
- சவுமிய
- தமிழ்
- தமிழ்நாடு
- உரிமைகள்
- ``சிங்கப்பென்னே உக்டு வா''
- பா.ம.க.
- சௌம்யா அன்புமணி
- திருப்பத்தூர்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாமக சார்பில் `சிங்கப்பெண்ணே எழுந்து வா’ என்ற தலைப்பில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தை சவுமியா அன்புமணி தலைமையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் வரவழைக்கப்பட்டனர்.
இதில் மூதாட்டிகள், கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் வந்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் அதில் கலந்துகொண்டவர்களுக்கு ஆம்பூரில் இருந்து தயாரிக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு வந்த ருசியான பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதனை பெற பெண்கள்முண்டியடித்தனர். கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரியாணி பொட்டலங்களை சாலையில் விழுந்து மிதிபட்டது. பலருக்கும் பிரியாணி கிடைக்கவில்லை.
இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சிலர் பசி மயக்கம் காரணமாக ரோட்டில் விழுந்த பிரியாணி பொட்டலங்களை எடுத்துச்சென்று சாப்பிடும் நிலை ஏற்பட்டது. தெரு நாய்களும் சூழ்ந்து பிரியாணி பொட்டலங்களை கவ்விச்சென்றது. சரியாக ஏற்பாடு செய்யாததால் கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் மற்றும் மூதாட்டிகள் அவதியடைந்தனர்.
