- நாச்சு நலு
- சட்டமன்ற உறுப்பினர்
- Vijayadharani
- நயினார் நாகேந்திரன்
- விஜய்-த்ரிஷா
- ராகுல் காந்தி
- Jothimani
1. விஜய்-திரிஷா குறித்தும், ராகுல் காந்தி – ஜோதிமணி குறித்தும் நயினார் நாகேந்திரன் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரு சர்ச்சையான வகையில் பேசுகிறார்கள். அதற்காக பெண் நிர்வாகி என்ற முறையில் நீங்களும் அவர்களை கண்டிக்காதது ஏன்? அப்படி எல்லாம் இல்லை. ஏற்கனவே அதைப் பற்றி நிறைய கமெண்ட்டுகள் வந்துவிட்டது.
இந்த பிரச்னையில், நடிகை திரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரனும் சொல்லிவிட்டார். அதனால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். இதை மேலும் கிளற விரும்பவில்லை. இதுபற்றி ஏற்கனவே நான் கருத்து சொல்லியிருக்கிறேன். ஆனால் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள்.
2. பாஜவில் மூத்த தலைவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும், இதனால் தான் அவர்களுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் என்ற பதவியை கொடுத்து பாஜ தலைமை ஒதுக்குகிறது என்ற கருத்தும் மேலோங்கி வருகிறதே? அப்படி எதுவும் இல்லை. இந்த கருத்தில் உண்மை இல்லை என்றே சொல்வேன்.
யாரை போட்டியிட வைக்க வேண்டும் என்று கட்சி முடிவு செய்கிறதோ, அவர்களுக்கு என்ன பொறுப்புகள் கொடுத்திருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அனைத்தும், கட்சி எடுக்கும் முடிவாகத் தான் இருக்கும்.. மூத்த தலைவரகள் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதில் எள்ளளவும் உண்மை இல்லை.
3. நயினார் நாகேந்திரன்-அண்ணாமலை இருவருக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வருவது குறித்து?
இருவருக்கும் இடையே எந்த மோதலும் கிடையாது. இரண்டு பேரும் அனைத்து கூட்டங்களுக்கும் ஒன்றாகத் தான் சென்று கொண்டிருக்கிறார்கள். அதை நான் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தினந்தோறும் எல்லா மீட்டிங்கிலும் ரெண்டு பேரும் ஒன்றாகத்தான் செயல்படுகிறார்கள். அதனால் எந்த மோதலும் இல்லை, அது தவறான செய்தி.
4. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறீர்கள்? தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகள் குறித்து பாஜ மேலிடமும், அதிமுக பொதுச்செயலாளரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இருதரப்பிலும் முறையாக நடந்து வரும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ, அதற்கேற்ப தொகுதிகள் பாஜவுக்கு ஒதுக்கப்படும். எத்தனை தொகுதிகள் என்பதை எல்லாம் அவர்கள்தான் முடிவு செய்வார்கள். இத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று நான் சொல்ல முடியாது. கட்சி தலைமை தான் முடிவெடுக்க முடியும். அதே நேரம், நான் இந்த தேர்தலில் போட்டியிடுவதும், கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்து எனது முடிவும் அமையும்.
