×

ஓபிஎஸ் எந்த பக்கம்ன்னு அவரே முடிவு செய்யட்டும்: நயினார் விரக்தி

பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி ரயில் நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: மார்ச் 11-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

ஓ.பி.எஸ் மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : OPS ,Nainar Vrakti ,BJP ,president ,Nainar Nagendran ,Trichy ,station ,Narendra Modi ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 89 அடியானது