×

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு பயிர் கடன்

காஞ்சிபுரம், பிப்.21: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகளை வழங்கினர். மேலும், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, புள்ளலூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.6.72 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்களும், 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.10,797 மதிப்பிலான (மண்புழு உரப்படுக்கை) வேளாண் இடுப்பொருட்களையும், 8 விவசாய பயனாளிகளுக்கு ரூ.16,000 மதிப்பிலான கைத்தெளிப்பான்களையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். முன்னதாக, உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, உலக தாய்மொழி தின உறுதிமொழியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் யோகவிஷ்ணு, வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி, அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kanchipuram ,People's Relation Center ,Kanchipuram District Collector ,Office Complex ,Collector ,Kalaiselvi Mohan ,
× RELATED சிங்கப்பெருமாள்கோவிலில் நாளை கொள்முதல் செய்வோர் சந்திப்பு கூட்டம்