×

வரதாரஜசுவாமி கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் பார்வையிட அழைப்பு

காஞ்சிபுரம்,பிப்.19: காஞ்சி
புரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வரதராஜசுவாமி கோயிலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கோயிலின் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி மற்றும் கோயில் தலைமை பட்டாச்சாரியார் கிட்டு ஆகியோர் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து கோயில் பிரசாதம் வழங்கினர். இதற்கு முன்பு வரதராஜசுவாமி கோயிலுக்கு சங்கர மடத்தின் சார்பில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நடைபெற்று வரும் கோயில் திருப்பணியை சங்கராச்சாரியார் பார்வையிட வேண்டும் எனவும், ஆலயத்துக்கு வந்து மங்களாசாசனம் செய்வதை பக்தர்கள் பலரும் எதிர்பார்ப்பதாகவும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சங்கராச்சாரியார் வரதராஜசுவாமி ஆலயத்துக்கு வருவதாக உறுதியளித்தார்.

Tags : Kanchipuram ,Shankara Math ,Vijayendra Saraswathi Swami ,Varadarajaswamy temple ,Maha Kumbabhishekam ,Athivaradhar ,Assistant Commissioner ,
× RELATED சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள...