×

புழல் சிறையில் சோதனையின்போது ஜெயிலரை தாக்கிய கைதியால் பரபரப்பு

புழல், பிப்.19: புழல் தண்டனை சிறையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம்.நகர் சேர்ந்த வினோத் (எ) கருக்கா வினோத் (44) என்பவர், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பெட்ரோல் பாம் போட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் சிறையில் உள்ளார். இவருக்கு, கடந்த சில மாதங்கள் முன்பு நீதிமன்றத்தின் மூலம் 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கருக்கா வினோத் தங்கி இருக்கும் அறையில், ஜெய்லர் சாந்தகுமார், துணை ஜெய்லர் செல்வம் மற்றும் காவலர்கள் சென்று சோதனை செய்தபோது, அவர்களை சோதனை செய்ய விடாமல் தடுத்து ரகளை ஈடுபட்டு, துணை ஜெய்லர் செல்வத்தை கைகளால் அடித்து தாக்கி, மிரட்டியுள்ளார். இதில், காயமடைந்த துணை ஜெய்லர் செல்வம், சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பணியில் திரும்பினார். இதுகுறித்து புகாரின்பேரில் புழல் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Puzhal prison ,Puzhal ,Puzhal penal prison ,Vinoth (A) Karukka Vinoth ,S.M. Nagar, Teynampet, Chennai ,Governor's House ,Guindy ,
× RELATED கதிர்வேட்டில் ரூ.14.10 லட்சத்தில் யோகா மேடை, விளையாட்டு கூடம்