சேலம், பிப்.21: சேலம் சூரமங்கலம் 2வது தர்மன் நகரை சேர்ந்தவர் அப்துல்சதார் (26). பட்டதாரியான இவர் கார் கன்சல்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி சென்னைக்கு சென்று கார் வாங்கி விட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவரை தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுபற்றி அவரது தந்தை அலாவூதீன்பாஷா சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
