×

தாயை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

சேலம், பிப்.21: சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வனஜா (70). இவரது மகன் சரவணன் (40). இவர் தாய் வனஜாவிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem ,Vanaja ,Odiapatti ,Saravanan ,
× RELATED 5 வயது மகளுடன் இளம்பெண் மாயம்