×

போலி சான்றிதழ் கொடுத்து 17 ஆண்டுகள் பணியாற்றிய கிராம அஞ்சல் ஊழியர் கைது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை வேலூர் துணை தபால் அலுவலகத்தில்

வேலூர், பிப்.21: வேலூர் துணை தபால் அலுவலகத்தில் போலி ஆவணம் தயாரித்து ெகாடுத்து 17 ஆண்டுகளாக பணியாற்றிய சேர்ந்த கிராம அஞ்சல் ஊழியரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தைச் சேர்ந்தவர் பாபு(55). இவர் கடந்த 2009ம் ஆண்டு 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கிராம அஞ்சல் ஊழியராக பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 2023ம் ஆண்டு வரை காட்பாடி துணை அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் 2023ம் ஆண்டு நிரந்தர பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, வேலூர் கோட்டை துணை அஞ்சலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது அசல் ஆவணங்களை சரிபார்த்தபோது அவர் 10ம் வகுப்பில் 241 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாகவும், ஆனால் அவர் 2009ம் ஆண்டு சமர்ப்பித்த 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் 341 மதிப்பெண் என திருத்தம் செய்து போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்து கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஜனவரி 6ம் தேதி வேலூர் கோட்ட தபால் துணை கண்காணிப்பாளர் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி அனுமந்தன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடத்தி வந்தனர். விசாரணையில், போலி ஆவணம் கொடுத்து பணியில் சேர்ந்தது உறுதி ஆனதால் பாபுவை நேற்று கைது செய்து நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : District Crime Branch Police ,Vellore Sub Post Office ,Vellore ,Babu ,Kadpadi Brahmapuram ,Vellore district ,
× RELATED சூப்பர்மார்க்கெட்டில் உலர் திராட்சைகள் திருட்டு