×

சுங்க கட்டண வசூல் உரிமம் ரூ.4.68 லட்சத்திற்கு ஏலம் கெங்கநல்லூர், கரடிகுடி வார சந்தை

அணைக்கட்டு, பிப். 20: அணைக்கட்டு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் கெங்கநல்லூர், கரடிகுடி வார சந்தைகள் இயங்கி வருகிறது. இந்த சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூல் உரிமை ஏலம் ஆண்டுதோறும் பிடிஓ அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026-2027ம் ஆண்டிற்கான ஏலம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பிடிஓ வினோத்குமார் ஏலத்தை நடத்தினார். பிடிஓ அலுவலக கணக்காளர் ராஜவேலு ஏல அறிவிப்பை வாசித்தார். கெங்கநல்லூர் ஊராட்சி துணை தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். 37 பேர் டெபாசிட் கட்டில் ஏலம் கேட்டனர். 50 ஆயிரத்தில் இருந்து ஏலம் தொடங்கியது, 10ஆயிரம், 1 லட்சம் 2 லட்சம், 3 லட்சத்து ஐந்தாயிரம் வரை ஏலம் போனது.

அதற்கு மேல் யாரும் கேட்காததால் கடைசியாக ஏலம் கேட்டவருக்கு 3 லட்சத்து 5 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. முன்னதாக நேற்று காலை கரடிகுடி வார சந்தை ஏலம் நடந்தது. பிடிஓ வினோத்குமார் ஏலத்தை நடத்தினார். தேவிசெட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்ஜோதிமணிமாறன், கரடிகுடி தலைவர் கிரிதரன் முன்னிலை வகித்தனர். 26 பேர் டெபாசிட் கட்டி ஏலம் கேட்டனர். 60 ஆயிரத்திலிருந்து ஏலம் தொடங்கியது. 85 ஆயிரம் வரை ஏலம் கேட்கப்பட்டு முடிக்கப்பட்டது. கடைசியாக 85 ஆயிரத்திற்கு ஏலம் கேட்ட ஏலதாரருக்கு ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 20% வரியுடன் சேர்த்து மொத்தமாக 2 வார சந்தையும் ரூ.4.68 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags : Kenganallur ,Karadigudi ,Anicut ,Anicut Union ,PDO ,
× RELATED பிரமோற்சவ தேர் சீரமைக்கும் பணி வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்