×

சூப்பர்மார்க்கெட்டில் உலர் திராட்சைகள் திருட்டு

வேலூர், பிப்.21: வேலூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் ரூ.20ஆயிரம் மதிப்புள்ள திராட்சைகள் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் பெருமுகையில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் மேலாளர் தினமும் அங்காடி மூடும்போது பொருட்களை இருப்பு சோதனை செய்வார். அப்போது உலர் திராட்சை பொருட்கள் குறைந்து வந்தது தெரிய வந்தது. நேற்று முன்தினம் மட்டும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள உலர் திராட்சை இருப்பு குறைந்தது. இதைத் தொடர்ந்து மேலாளர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vellore ,
× RELATED நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சிஎம்சி...