×

வெனிசுலாவில் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

காரகஸ்: வெனிசுலாவில் அரசியல் காரணங்களுக்காக பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலாவின் அதிபராக நீண்ட கால சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் நிகோலஸ் மதுரோ. இவர் மீது போதை பொருள் கடத்தல், கொலம்பியாவுடன் இணைந்து கோகைன் கடத்தல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிகோலஸின் ஆட்சியின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்,பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் வெனிசுலா நாட்டிற்குள் அமெரிக்க ராணுவ வீரர்கள் அதிரடியாக புகுந்து நிகோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தினர். நிகோலஸ் மதுரோவுக்கு பின்னர் தற்காலிக அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். இந்த நிலையில், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிபர் டெல்சி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அரசியல் காரணங்களுக்காக சிறைகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

Tags : Caracas ,Venezuela ,Nicolas Maduro ,South America ,
× RELATED பெண்களை அடிப்பது குடும்ப வன்முறை ஆகாது: தாலிபான் அரசு புதிய சட்டம்