- கத்தார் ஓப்பன் டென்னிஸ்
- மென்சிக்
- சின்னர்
- தோஹா
- எண்
- ஜானிக் சின்னர்
- ஜக்குப் மென்சிக்
- கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி
தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், செக் வீரர் ஜாகுப் மென்சிக்கிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தோஹா நகரில் நடந்து வருகின்றன. கடந்த 18ம் தேதி நடந்த போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸி பாபிரினை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். அதே நாள் நடந்த மற்றொரு போட்டியில் செக் வீரர் ஜாகுப் மென்சிக், சீன வீரர் ஜாங் ஜிஸெனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் சின்னர், உலகின் 16ம் நிலை வீரர் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார். போட்டியின் முதல் செட்டில் இரு வீரர்களும் சளைக்காமல் ஆக்ரோஷமாக மோதியதால் டை பிரேக்கர் வரை நீண்டது.
கடைசியில் அந்த செட்டை, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் மென்சிக் வசப்படுத்தினார். அடுத்த செட்டில் சுதாரித்து ஆடிய சின்னர், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். இருப்பினும் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் மென்சிக் அட்டகாசமாக ஆடி 6-3 என்ற புள்ளிக் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். அதன் மூலம் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய மென்சிக் அரை இறுதிக்கு முன்னேறினார். முன்னதாக நேற்று முன்தினம் நடந்த காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், ரஷ்ய வீரர் கரென் காஷனோவை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
