- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேமுதிக
- எடப்பாடி
- திமுக
- திருமாவளவன்
- Senchi
- விடுதலைப் புலிகள்
- தொல்.
- AIADMK கூட்டணி
- விஜய் பார்ட்டி...
செஞ்சி: செஞ்சியில் நேற்றிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலவர் தொல். திருமாவளவன் எம்பி பேசியதாவது: அதிமுக கூட்டணிக்கு அல்லது புதிதாக உருவாகி இருக்கிற விஜய் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு போக முடியும் என்கிற வாய்ப்பு இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்வோம் என்று திரும்பத் திரும்ப நான் சொல்வதற்கு, நான் உள்வாங்கி இருக்கிற அம்பேத்கர் அரசியல் தான், மார்க்சியம் தான் அதற்கு காரணம். ஆசை மூட்டி வெளியே வா உனக்கு நான் 10, 15 தருகிறேன் என திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது பிஜேபியின் செயல் திட்டங்களில் ஒன்று. மகாராஷ்டிராவில் உள்ளே புகுந்து குழப்பி ஆட்சியை கைப்பற்ற முடிந்தது. மேற்கு வங்கத்திலும் அவர்களால் வாலாட்ட முடிந்தது ஆனால் அவர்களால் வாலாட்ட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
தேமுதிக திமுக கூட்டணியில் சேர்ந்தது எடப்பாடிக்கு விழுந்த அடி. அவர் எதிர்பார்த்து இருக்க மாட்டார். இது தேமுதிக எடுத்த அரசியல் என்பதை விட அண்ணன் தளபதியின் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) ராஜதந்திரம் என்பது தான். திமுக தலைவர் நம்முடைய கூட்டணியின் தலைவர். அவர் எடுத்திருக்கிற இந்த நிலைப்பாடு தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது உச்சந்தலையிலேயே விழுந்திருக்கிற இடி, எல்லாம் நிலை குலைந்து போனார்கள், இங்க ஒன்றும் அவர்களால் செய்ய முடியாது.
இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக ஒரு கூட்டணி இருக்கிறது என்றால் அது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான். விஜய்யை தேடி ஒரு கட்சிகூட போய் இன்னும் சேரவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர்வதற்கு தயக்கம் காட்டிக் கொண்டிருக்கின்றன. திமுக தலைமையில் வலிமையுள்ள கூட்டணி 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி என்கிற செய்தி பதிவாக வேண்டும். பதிவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
