தமிழ்நாட்டு மக்களை போல அடுத்த 2 மாதத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை எனக்கும் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டு மக்களை போல அடுத்த 2 மாதத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை எனக்கும் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

*இவ்வாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை, வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிறப்பான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம்.

*அடுத்த 2 மாதங்களில் இன்னும் வேகமாக வந்து பணியை தொடர்வோம் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. மக்களுக்கும் இருக்கிறது.

*தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசை நடத்தி இருக்கிறோம் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாக நடத்தியதாக நான் உணர்கிறேன்.

*திராவிட மாடலின் 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், இன்று கூடுதல் வலிமைப் பெற்று, தமிழ்நாட்டை மேலும் ஏற்றம்பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும், எதனையும் எதிர்கொள்ளக்கூடிய வல்லமையையும் பெற்றுள்ளேன்.

*வரலாற்று சிறப்புமிக்க இந்த இருக்கையில் எனக்கு முன் இருந்த பலரும் இன்று இல்லாவிட்டாலும் அவர்கள் அனைவரும் போற்றப்படக்கூடியவர்கள். பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, எதையும் தாங்கும் வல்லமை, கடமை தவறாமை ஆகிய பண்புகளை நானும் கடைப்பிடித்திருக்கிறேன்.

*மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையே நாளைய ஆட்சியாளர்களாக எங்களை தொடர செய்யப் போகிறது. நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் எனும் ஊக்கத்தை நான் பெற்றுள்ளேன்.

*234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து நான் செய்யலாற்றி உள்ளேன். என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி. மிகப்பெரிய வாய்ப்பு தந்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி

*வாக்களித்த மற்றும் வக்காளிக்காத மக்கள் என பிரித்து பார்க்காமல் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். ஆளுநருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

*சுயமரியாதை சீண்டப்பட்டால் எதிர்குரல் கொடுக்கும் முதல் ஆளாக நான்தான் இருப்பேன். குறைகளை சொல்பவர்கள் நம் முன்னேற்றத்துக்கு சிறகுகளை தரக்கூடியவர்கள். குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியமான நடைமுறையை பின்பற்றிய எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி.

*எங்கள் சாதனைகளுக்கு தோளோடு தோள் நின்ற கூட்டணி கட்சிகளுக்கும் நன்றிகள். என் மீது உரிமையோடு அன்புகாட்டி வரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி.

*5 ஆண்டுகளில் தமிழ்நாடு சமச்சீரான வளர்ச்சியை அடைந்துள்ளது. முந்தைய ஆட்சியில் இருந்த மிக மோசமான நிலையில்தான் ஆட்சிக்கு வந்தோம். பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

*5 ஆண்டுகளில் எனக்கும் எனது மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கிறேன். எங்கள் சாதனையை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 அமையும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: