சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (புறநகர் நடைமேடைகள்) கையாளப்படும் புறநகர் ரயில்கள், 2026 பிப்ரவரி 20 நள்ளிரவு 00:00 மணி முதல் ஏப்ரல் 5 நள்ளிரவு 23:59 மணி வரை (45 நாட்களுக்கு) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படவுள்ளன.
சென்னை கடற்கரை தாம்பரம்/செங்கல்பட்டு/ காஞ்சிபுரம்/அரக்கோணம்: பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை, அனைத்து மின்சார (EMU) ரயில்களும் சென்னை எழும்பூரில் 6-வது நடைமேடையில்* (விரைவுப் பாதை) இயக்கப்படும்.
அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் சென்னை கடற்கரை: மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரயில்களும் இதே காலகட்டத்தில் சென்னை எழும்பூரில் 5-வது நடைமேடையில்* (விரைவுப் பாதை) இயக்கப்படும்.
* ரயில் எண்கள், நேர மாற்றம்:
இந்தக் காலகட்டத்தில் (2026 பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை), சென்னை கடற்கரை தாம்பரம் /செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் தற்போதுள்ள மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த தற்காலிக நேர அட்டவணை இணைப்பு A-வில் (Annexure – A) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது
