சென்னை: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா; தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். 2016ம் ஆண்டிலேயே திமுகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்பினார். விஜயகாந்த் இருக்கும் போது 2016 லேயே திமுகவுடன் கூட்டணி அமைந்திருக்க வேண்டியது.
10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜயகாந்த் விருப்பம் நிறைவேறியுள்ளது. 2016ம் ஆண்டிலேயே தேமுதிகவை திமுக கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டணியில் இணையாவிட்டாலும் தேமுதிக, திமுக தலைவர்கள் இடையே நட்பு தொடர்ந்து நீடித்தது. விஜயகாந்த் மறைவின்போது அரசு சார்பில் அவரது இறுதிச்சடங்கு, இறுதி ஊர்வலத்துக்கு விரிவான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது. திமுகவுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணிக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இருக்கும். 200+ தொகுதிகளை வெல்வோம். அதை வெல்வதே எங்கள் இலக்கு. தொகுதிப் பங்கீடு குறித்து குழு முடிவு செய்து அதனை முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார்
