- மோடி அரங்கம்
- குஜராத்
- இந்தியா
- நெதர்லாந்து
- T20 உலகக் கோப்பை கிரிக்கெட் லீக்
- நரேந்திர மோடி அரங்கம்
- அகமதாபாத், குஜராத்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சிவம் துபே சிக்சர்
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம், டி20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியை காண தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் சென்றிருந்தனர். இந்திய வீரர் ஷிவம் துபே சிக்சர் அடிக்கும்போது, அந்த பந்து சென்ற ஸ்டேண்டில் 2 பேனர்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
ஒரு பேனரில், ‘‘ஸ்டாலின் தொடரட்டும் 2026’’ எனக் குறிப்பிட்டிருந்தனர். மற்றொரு பேனரில் கரூர், சேலத்தில் 43 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்த த.வெ.க.வை முடக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோ தற்போது, பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அவர் பெயரிலான ஸ்டேடியத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை தொடர வேண்டும் என வலியுறுத்தி ரசிகர்கள் பேனர்களை காட்டியது, வடமாநிலங்களில் பேசு பொருளாகியுள்ளது. அதுவும் இந்தியா கூட்டணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்து வட இந்திய அரசியல் கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில், இச்செயல் வைரலாகியுள்ளது.
