×

நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி இடமாற்றம்

திருவனந்தபுரம்: மலையாள நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி ஹனி எம். வர்கீஸ் ஆலப்புழாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எர்ணாகுளம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹனி எம். வர்கீஸ் கடந்த 2019ம் ஆண்டு மலையாள நடிகை பலாத்கார வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு இவர் எர்ணாகுளம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற பின்னர் இவரது நீதிமன்றத்திற்கு பலாத்கார வழக்கு மாற்றப்பட்டது.

கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹனி எம். வர்கீஸ், கடந்த வருடம் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு வழங்கினார். முதல் 6 குற்றவாளிகளுக்கு 20 வருடம் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டியது, ஆவணங்களை அழித்தது ஆகிய குற்றங்கள் சம்பந்தப்பட்ட நடிகர் திலீப் உள்பட 4 பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டதும், நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டதும் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீதிபதி ஹனி எம். வர்கீஸ் நேற்று ஆலப்புழாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக ஆலப்புழா மாவட்ட முதன்மை நீதிபதி பாலகிருஷ்ணன் எர்ணாகுளம் மாவட்டம் முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Thiruvananthapuram ,Honey M. Varghese ,Alappuzha ,Ernakulam CBI court ,
× RELATED வளமான எதிர்காலத்திற்கான இந்தியாவின்...