×

தொலை நோக்கு பார்வை கொண்டவர் சத்ரபதி சிவாஜி: பிரதமர் மோடி புகழாரம்

 

புதுடெல்லி: இந்தியாவில் மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய மாவீரரான சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளான பிப்ரவரி 19ம் தேதி ‘சிவாஜி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. முகலாயர்களின் ஆட்சியை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய சிவாஜிக்கு அவரது தலைமை மற்றும் நிர்வாகத்தின் காரணமாக சத்ரபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி, புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, தொலை நோக்கு தலைவர், திறமையான நிர்வாகி மற்றும் சுயராஜ்யத்தின் வீரராக இருந்த ஒரு சிறந்த ஆளுமைக்கு நமது மரியாதை செலுத்துகிறோம். அவரது வீரம் நம்மை ஊக்குவிக்கட்டும். அவரது நல்லாட்சி நம்மை வழிநடத்தட்டும். அவரது நீதி உணர்வு மற்றும் சுயமரியாதை நமது சமூகத்தை மேம்படுத்தட்டும். சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட தலைவர். அவரது துணிச்சலும் நிர்வாகமும் அனைவரை யும் வழிநடத்துகிறது.

 

Tags : Chhatrapati Shivaji ,PM Modi ,New Delhi ,Maratha Empire ,India ,Shivaji ,Jayanti ,Mughal ,Chhatrapati ,
× RELATED குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு...