×

தழுதாழை ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

பெரம்பலூர்,பிப்.18: தழுதாழை ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட, தழுதாழை ஊராட்சியில் பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொது மக்களுக்கு சென்றுசேர்க்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக்காட்சிகள் நடத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்டக் கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்களின் தொகுப்புகளை சிறு புகைப் படக் கண்காட்சிகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட, தழுதாழை ஊராட்சியில் நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்டக் கலெக்டர்,

சட்டமன்ற உறுப்பினர், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கிய புகைப் படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப் படக் கண்காட்சியை 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பார்வையிட்ட அனைவருக்கும் தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

 

 

Tags : Thaludhazhi Panchayat ,Perambalur ,Tamil Nadu government ,Perambalur District News Public Relations Department ,Veppandatta Union ,Perambalur District ,
× RELATED தமிழ்க்கூடல் விழா தாய் மொழியை பிறமொழி கலப்பில்லாமல் பேசவேண்டும்