- நமையூர் நரி ஓடை
- குன்னம்
- நரிகுரவார்கள்
- குன்னம் தாலுக்கா, பெரம்பலூர் மாவட்டம்
- சட்டமன்ற உறுப்பினர்
- மின்சார அமைச்சர்
- சிவசங்கர்
- நமையூர்…
குன்னம், பிப்.18: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் நமையூர் நரி ஓடை பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சிவசங்கரிடம் இலவச வீட்டு மனை கேட்டு கோரிக்கை வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று நமையூர் நரிக்குறவர்கள், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரையை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித்தர கேட்டுக்கொண்டனர்.
அப்போது, குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை நரிக்குறவர்களை அன்போடு வரவேற்று அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் விரைவில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். அவரின் நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த நரிக்குறவர்கள் அவருக்கு பாசிமணி மாலை அணிவித்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ஷர்மிளா இருந்தார்.
