சாலை பாதுகாப்பு மாதம் ஹெல்மெட் அவசியம் விழிப்புணர்வு பேரணி

திருவாரூர், பிப்.5: திருவாரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஒரு மாத காலத்திற்கு நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கடந்த மாதம் 17ம் தேதி முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை விதிகளை கடைப்பிடிப்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி நேற்று திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து ஹெல்மெட் பேரணியானது நடைபெற்றது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியானது தஞ்சை சாலை, விளமல், கலெக்டர் அலுவலகம் வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிவுற்றது.

Related Stories: