தேசிய அளவில் நடைபெற்ற IRIS போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

 

சென்னை: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நாத்துக்குளிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் அணி, தேசிய அளவில் நடைபெற்ற IRIS போட்டியில் வெள்ளிப்பதக்கம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பாராட்டி பரிசுகள் வழங்கினார். பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தில் (SIDP 3.0) மாநிலத்தில் முதல் பரிசு பெற்ற நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நாத்துக்குளிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் அணியானது, தேசிய அளவில் நடைபெற்ற IRIS (Initiative for Research and Innovation in STEM) போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று (17-02-2026) பள்ளி மாணவர்களை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைத்த பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டமானது (School Innovation Development Project -SIDP) பள்ளிக்கல்வித்துறையுடன் இனைந்து செயல்படுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம் (UNICEF), அறிவுசார் பங்குநிறுவனமாக (Knowledge Partner) செயல்பட்டு வருகிறது. இத்திட்டமானது 8074, அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 13000 த்திற்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்களைக் கொண்டு, 6 -ஆம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் முக்கியமான நோக்கம், பள்ளி மாணவர்களிடையே புத்தாக்க கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்தல் மற்றும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வளர்த்தல், அவர்களுக்கு தலைமை பண்புகளை உருவாக்குதல், பிரச்சனைகளை (தேவைகளை) கண்டறிந்து அதற்கான தீர்வுகாண ஊக்கப்படுத்துதல் ஆகும்.

கடந்த ஆண்டு SIDP 3.0 வில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நாத்துக்குளிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் கலந்துகொண்ட மாணவர் அணியினர் சமர்ப்பித்த அன்னாசி விவசாயிகளுக்கு உதவும் அன்னாசி அறுவடைக் கருவி கண்டுபிடிப்பிற்கு அமைச்சர் அவர்கள் ரூ.1,00,000/- இலட்சம் வழங்கி பாராட்டினார்கள். அந்த அணியானது தேசிய அளவிலான IRIS போட்டியில் கலந்துகொண்டது. இந்த அணியின் சிறப்பான கண்டுபிடிப்பை பாராட்டும் வகையில், இக்குழுவிற்கு வெள்ளிப் பதக்கம் (Silver Medal) வழங்கப்பட்டது.

இந்த சாதனை SIDP 3.0 திட்டத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். IRIS போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்களுக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைப்பதுடன், மேம்பட்ட நிலைகளில் அமெரிக்காவில் நடைபெறும் Regeneron International Science and Engineering Fair (ISEF) போன்ற சர்வதேச மேடைகளில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்கும் வாய்ப்பினையும் இந்த மாணவர் அணி பெற்றுள்ளது. இந்நிகழ்வில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் திரு. அதுல் ஆனந்த், இ.ஆ.ப. தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திரு. நிர்மல்குமார், இ.ஆ.ப. EDII நிறுவனத்தின் ஆணையர் திருமதி. க.லதா இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: