சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது. அண்ணா இறுதியில் எழுதியதுதான் மாநில சுயாட்சி கொள்கை. ஒன்றிய-மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த குழுவின் அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்க இருக்கிறோம். கூட்டாட்சி தத்துவத்தை அரசியல் சட்டத்தின் கோட்பாடாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் ஒன்றிய அரசு வைத்துள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளை மதிப்பதில்லை என முதல்வர் கூறினார்.
அனைத்து அதிகாரங்களை வைத்துள்ள ஒன்றிய அரசு மாநில அரசுகளை மதிப்பதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- யூனியன் அரசு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- சட்டப்பேரவை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- அண்ணா
- ஒன்றியம்- அரக்கோணம் ஊராட்சி
