சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு தேவையான Live நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மட்டும் 1,500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
