வேகம் காட்டிய ஸ்காட்லாந்து சுழலில் சுருட்டிய இங்கிலாந்து

கொல்கத்தா: உலக கோப்பை ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தாவில் சி பிரிவில் நடந்த 23வது போட்டியில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்ய ஸ்காட்லாந்து அணி ஓபனர் முனிசே 4 ரன்னில் அவுட் ஆகியும், அடுத்து வந்த மெக்முல்லன் டக் அவுட் ஆகியும் ஏமாற்றமளித்தனர். அடுத்து ஜோன்ஸ், கேப்டன் பெரிங்டான் ஜோடி சேர்ந்து ரன்களை வேகமாக உயர்த்தினர். இவர்களது ஆட்டத்தால் ஸ்காட்லாந்து அணி எளிதாக 200 ரன்னை கடக்குமென என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் கடைசிநேரத்தில் கட்டுக்கோப்பாய் பந்து வீச ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவரில் 152 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பெரிங்டான் 49 ரன் எடுத்தார். ரஷீத் 3 விக்கெட், ஆர்ச்சர், டவ்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து இறங்கிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 63 ரன் எடுத்த டாம் பேன்டனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Related Stories: