×

என் கார்ல விஜய கூட்டிட்டு போய் எடப்பாடியுடன் சந்திக்க வச்சேன்… சீக்ரெட்டை சொன்ன எஸ்.பி.வேலுமணி

கோவை: தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: கட்சியை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம், அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் மக்களுக்காகப் போராட வேண்டும். எம்.ஜி.ஆர் நடிகராக இருந்ததால் முதல்வர் ஆகவில்லை, நல்லவர் என்பதால் மக்கள் அவரைத் தேடி வந்தனர். கரூரில் த.வெ.க கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு பேசிக் கொண்டு இருந்தவர், பின்னால் இறங்கி நேராக விமான நிலையத்திற்கு சென்று விட்டார்.

சினிமாவில் கேமரா முன்பு நடித்து விட்டுச் செல்வது போல இதுவும் ஆகிவிட்டது. விஜய் எனக்கு நல்ல நண்பர் தான். ஒரு படத்தின் வெளியீட்டுச் சிக்கலின் போது நான் தான் அவரை எனது காரில் அழைத்துச் சென்று எடப்பாடியிடம் பேச வைத்தேன். அதன் பிறகு தான் அந்தப் படம் தீபாவளிக்கு வெளியானது. நட்பு என்பது வேறு. ஆனால் 41 பேர் உயிரிழந்த போது அவர்களை பார்க்காமல் விட்டு, விட்டுச் சென்றவரை எப்படித் தலைவனாக ஏற்க முடியும். தன் கட்சிக்காரர்களையே உயிருக்குத் துடிக்கும் போது விட்டுச் செல்பவர், நாளை நாட்டை ஆள வந்தால் நாடு எப்படி இருக்கும் சிந்தித்து பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Karla Vijaya ,Edappadi… ,S.P. Velumani ,Coimbatore ,Former minister ,AIADMK ,Thondamuthur ,MGR ,Chief Minister ,
× RELATED சொல்லிட்டாங்க…