×

எம்ஜிஆர், ஜெயலலிதா சொன்னதை மறந்து சரண்டர் ஆகிட்டாங்க… அதிமுக ஒரு டார்க் ரூம் கட்சி: கொள்ளையடிப்பதுதான் அவர்கள் அனுபவம் என விஜய் விளாசல்

சேலம் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: யே விஜய் வீட்டை விட்டு வெளியே வா, பனையூரை விட்டு வெளியே வா, அப்படி சொல்பவர்களுக்கு என் வீடு எதுன்னு தெரியுமா? முதலில் என்வீடு எங்க இருக்கிறது என்றாவது தெரியுமா? என்னை சீண்டி பார்ப்பதாக நினைத்து கிண்டலும், கேலியுமாக பேசுறாங்க. அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்த தமிழ்நாடு மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஸ்டேட்டாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் என் தாய்நாடான தமிழ்நாடு தான் என் வீடு. ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள்.

அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி அதிகாரத்தை செய்ய முடியும்? என்று ஒரே விஷயத்தை கேட்கிறார்கள். அண்ணாவை மறந்தது, கட்சி ஆரம்பித்த எம்ஜிஆரை மறந்தது, கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தது. அவர்கள் எல்ேலாரும் சொன்ன விஷயங்கள், பேசின விஷயங்களை மறந்தது தான். இவர்கள் தான் நமக்கு அனுபவம் இல்லை என்று கூறுகிறார்கள். கொள்ளை அடிப்பதில் எங்களுக்கு அனுபவம் என்பது இல்லை தான். அதெல்லாம் எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

இந்த கொள்கையை பேருக்கு மட்டும் வைத்துவிட்டு நேரடியாக சரண்டர் ஆவது, மறைமுகமாக சரண்டர் ஆவது போன்ற அனுபவம் எல்லாம் நமக்கு இல்லை.
டெல்லியில் யாரும் நமது உரிமையை தராவிட்டால் நேரடியாக போய் சண்டையிட்டு பெற்றுத்தருவேன். விஜய் ஏன் இவர்களை மட்டும் எதிர்க்கிறார்? அவர்களை எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள். இது தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு நடக்கும் எலக்சன். எனவே ஆட்சியில் இருப்பவர்களை தான் எதிர்க்க முடியும். எதற்கு தேவையில்லாமல் மக்கள் பலமுறை டெலிட் செய்த கட்சிகளை எதிர்க்க வேண்டும்? டார்க்கெட் ஒரு கட்சியாக இருக்கும் போது டார்க்ரூம் கட்சிகள் மீது ஏன் கல் எறிய வேண்டும்? இவ்வாறு விஜய் பேசினார்.

* பாஜ பற்றி ‘கப்சிப்’
விஜய் பேசும்போது டெலிட் செய்யப்பட்ட கட்சிகள் என்று சொன்னாலும், அதிமுகவை மட்டுமே கடுமையாக தாக்கி கருத்துகளை கூறினார். ஆனால், பாஜவை பற்றி ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு முன் பாஜவை தாக்கி பேசி வந்த விஜய், டெல்லிக்கு சென்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விட்டு வந்த பின் அவர்களை பற்றி வாயே திறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : MGR ,Jayalalitha ,Sarandr ,Vijay Vlasal ,Tamil Victory Club of ,Salem ,District ,KVP Garden Ground ,Silanayakanpati ,Akkatsi Vijay ,Vijay ,Panayur ,Panaiur ,
× RELATED சொல்லிட்டாங்க…