×

பாதிக்கு பாதி வேணும் ஓவரா அடம் பிடிக்கும் பாஜ

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதைக்கு உள்ள கட்சிகளிடம் இருந்து அதிமுக தலைமை தரப்பில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளின் பட்டியலை கேட்டுள்ளனர். இதன்படி, ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கான விருப்ப தொகுதிகளின் பட்டியலை கொடுத்துள்ளனர். இதில், பாஜ தரப்பில் கொடுக்கப்பட்ட பட்டியலைப் பார்த்து அதிமுகவினர் சற்றே மிரண்டுள்ளனர். இதன்படி, மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. இதில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகள் கட்டாயம் வேண்டுமென்றும், கூடுதலாக 2 தொகுதிகளையும் தர வேண்டுமென்றும் பட்டியல் கொடுத்துள்ளனர்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளன. இதில் பழநி, நிலக்கோட்டை (தனி) ஆகிய 2 தொகுதிகள் கட்டாயம் என்றும், மேலும் 2 தொகுதிகளையும் கேட்டுள்ளனர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை பாஜவினரின் விருப்ப பட்டியலில் எந்த தொகுதியும் இல்லை. அதே நேரம் விருதுநகர் மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளன. இதில், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய 4 தொகுதிகள் பாஜவிற்கு கட்டாயமாம். காரணம், எங்க கட்சிக்கு அங்கே செல்வாக்கு அதிகம் என கூறியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கை, காரைக்குடி தொகுதிகள் விருப்ப முன்னுரிமை பட்டியலில் உள்ளது. இதைப்போலவே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், ராமநாதபுரம் தொகுதிகள் பாஜவிற்கு ஒதுக்கப்பட வேண்டுமாம். இப்படி தென்மாவட்டம் முழுவதும் விருப்ப தொகுதிகளை பட்டியல் தந்து, அதிமுகவினரை வெறுப்புக்குள்ளாக்கி வருகிறது பாஜ. இந்த பட்டியலைப் பார்த்து மாஜி அமைச்சர்களும், அதிமுக மாவட்ட செயலாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

* தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வபெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார்நாகேந்திரன்(பாஜக தலைவர்) திருச்சி
பெ.சண்முகம்(சி.பி.எம்.மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி ராமதாஸ்(பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) டெல்லி
சீமான்(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
விஜய்(தவெக தலைவர்) பனையூர்

Tags : BJP ,AIADMK ,National Democratic Alliance ,Tamil Nadu ,BJP… ,
× RELATED சொல்லிட்டாங்க…