சாலை பாதுகாப்பு விழாவில் ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணி

தூத்துக்குடி, பிப்.4: சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தூத்துக்குடியில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர், எஸ்.பி., ஆகியோர்  ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்துதுறை சார்பில் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்புடன் இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடந்தது. வஉசி கல்லூரி முன்பு துவங்கிய பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் மற்றும்  எஸ்.பி., ஜெயக்குமார் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் சேர்ந்து பைக்கில் சென்று  இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இருவரும் ஹெல்மெட் அணிந்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தூத்துக்குடி பாளை ரோடு எம்.ஜி.ஆர் பூங்கா முன்பிருந்து துவங்கிய பேரணி விவிடி சிக்னல், குரூஸ்பர்னாந்து சிலை ரவுண்டானா வழியாக மாதா கோயில் வரை சென்று  நிறைவடைந்தது. இதில், டவுன் டிஎஸ்பி கணேஷ்,  வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் குமார், பெலிக்ஸ்மாசிலாமணி, தாசில்தார் ஜஸ்டின் செல்லதுரை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், எஸ்ஐ வெங்கடேசன் உள்ளிட்டவர்கள்   கலந்துகொண்டனர்.

Related Stories: