×

ரயிலில் அடிபட்டு காதலன் உயிரிழந்த வேதனை: காதலி தூக்கிட்டு தற்கொலை

 

பெரம்பூர்: சென்னை அயனாவரம் சோலையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் டிரைவர். இவரது மனைவி சாய்னாபேகம். இவர் கடந்த 2006ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதன்பிறகு கடந்த 2013ம் ஆண்டு எப்சிபா சரண்யா என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி மூலம் சுப்பு சவுமியா (20), 2வது மனைவி மூலம் சவுந்தர்யா (11) என்ற குழந்தைகள் உள்ளனர். இதில், சுப்பு சவுமியா காயிதே மில்லத் கல்லூரியில் 3ம் ஆண்டு வரலாறு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை கல்லூரிக்கு சென்றுவிட்டார். இதன்பின்னர் ஜெகதீசன், எப்சிபா சரண்யா ஆகியோர் வேலைக்கு சென்றுள்ளனர். மதியம் 2 மணி அளவில் தந்தைக்கு போன் செய்த சுப்பு சவுமியா, ‘’கல்லூரி முடிந்து வீட்டிற்கு வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு மாலை 4 மணி அளவில் சவுந்தர்யா வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. பலமுறை தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சென்று கதவை உடைத்து பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சுப்பு சவுமியா தனது துப்பட்டாவால் தூக்கிட்டு இறந்துகிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அயனாவரம் இன்ஸ்பெக்டர் வர்கீஸ் தலைமையில் போலீசார் சென்று சுப்பு சவுமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில், கீழ்பாக்கம் சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவரை சுப்பு சவுமியா காதலித்துள்ளார். கடந்த 4ம்தேதி மாலை சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு சதீஷ்குமார் இறந்தார்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சுப்பு சவுமியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலன் இறந்த சோகத்தில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Perambur ,Jagatheesan ,Solaiamman Temple Street, Ayanavaram, Chennai ,Saina Begum ,Fsipa Saranya… ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறில்...