×

பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன்மூலம், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நேற்று நடந்த சந்தை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலான மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

இதில், நாட்டு காளை மாடு ரூ.48 ஆயிரம் வரையிலும், ஆந்திரா காளை மாடு ரூ.75 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.35 ஆயிரம் வரையிலும், எருமைமாடு ரூ.55 ஆயிரத்துக்கும் என கடந்த வாரத்தைவிட சராசரியாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை என கூடுதல் விலைக்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi market ,Pollachi ,Gandhi Market ,Pollachi, Gowai district ,Tamil Nadu ,
× RELATED ஒலி மாசு புகார் எதிரொலி குலசேகரத்தில்...