சென்னை: திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் இணைந்து ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தம் நடக்கிறது. வேலை நிறுத்தத்தில் ஒன்றிய அரசாங்கம் தன்னிச்சையாக மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலும், தொழிற்சங்கங்களோடு முறையாக கலந்து ஆலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் விவாதமின்றியே நிறைவேற்றிய 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசின் பொறுப்பை தட்டிக் கழித்து மாநிலங்களின் நிதிச் சுமையை கூடுதலாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டுமென்பதை வலியுறுத்தியும் நடக்கும் வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. தொழிற்சங்கங்கள், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்கிற நல்ல நோக்கத்தோடு திமுக போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
