×

பட்ஜெட்டில் வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

சென்னை: பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து நாளை மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியை தடுத்து வரும் ஒன்றிய பாஜ அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுகவையும் கண்டித்து-தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் 12ம் தேதி காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து 12ம் தேதி (நாளை) ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் நடத்துவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, வருகிற நாளை மாலை 4 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Union government ,DMK alliance ,Chennai ,Union ,Tamil ,Nadu… ,
× RELATED ஒண்ணுக்கே வழியில்ல… விஜய்யை பொளந்து கட்டிய சண்முகம்