×

3 பாஜவுக்கு ரங்கசாமி கண்டிஷன்: புதுச்சேரியில் தொங்கும் கூட்டணி

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த தேர்தல் போன்று சீட் பங்கீடு செய்து கொள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணி முடிவு செய்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜ 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டது. டெல்லி பாஜ தலைமை உத்தரவின்பேரில் லாட்டரி அதிபர் மகன் சார்லசும் பாஜ கூட்டணியில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இம்முறை சட்டமன்ற தேர்தலில் 16 தொகுதிகளை என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கவிட்டு பாஜ 10 தொகுதிகளிலும் அதிமுக 2 தொகுதிகளிலும், லாட்டரி அதிபர் சார்லஸ் கட்சிக்கு 2 சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்து வந்த சார்லசை கட்சியை சேர்ப்பதில் முதல்வர் ரங்கசாமிக்கு நெருடல் இருந்து வருகிறதாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 சீட்டை குறைக்கவில்லை. மீதியுள்ள சீட்டில் நாங்கள் ஏதாவது செய்து கொள்கிறோம் என பாஜ தரப்பு கூறிவிட்டதாம். வரும் 24ம் தேதி காரைக்கால் சந்தை திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். தொடர்ந்து மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி புதுவைக்கு வருகிறார். அதற்குள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் சுரானா, பாஜ தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரும் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அப்போது, மூன்று நியமன எம்எல்ஏ பதவிகளில் ஒன்று என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும். இந்த முறை ராஜ்யசபா சீட்டை என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும். புதுவை அரசு அனுப்பும் கோப்புகளை திருப்பி அனுப்பும் கவர்னரின் செயலராக இருக்கும் மணிகண்டனை இடமாற்றம் செய்ய வேண்டும் என 3 கண்டிஷனை போட்டுள்ளார். இதை நிறைவேற்றினால் தான் தேர்தல் பிரசாரம் உள்பட அனைத்தும் சுமூகமாக இருக்கும் என கறாராக ரங்கசாமி கூறிவிட்டாராம். இதனால் ரங்கசாமியை டெல்லி தலைமை சமாதானப்படுத்தி வருகிறதாம்.

* பி.எல்.சந்தோஷை சந்திக்க மறுப்பு
புதுவை பாஜ நிர்வாகிகள் கூட்டம் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில் தேசிய அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும். ஒன்றுமையாக இருந்து வெற்றி பெற்று மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார். பின்னர், முதல்வர் ரங்கசாமியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர், இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

Tags : BJP ,Puducherry ,Puducherry assembly elections ,NR Congress ,AIADMK… ,
× RELATED ஒண்ணுக்கே வழியில்ல… விஜய்யை பொளந்து கட்டிய சண்முகம்