×

மந்திரி பதவி கேட்குறாங்க… என்ன பண்றது? அதிமுக பேசி தேமுதிக படியல அதனால பாஜ மேலிடம் பேசுது: கூட்டணி பேச்சில் எடப்பாடிக்கு அதிகாரமில்லையா? விஜய் புரட்சி தளபதியா? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் திடீர் பரபரப்பு

திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று அளித்த பேட்டி: அதிமுக – பாஜ கூட்டணி ஆட்சியா என்கிறீர்கள். இப்போதுதான் நாங்கள் நிச்சயம் செய்து உள்ளோம். இனி தாலி கட்ட வேண்டும். குடும்பம் நடத்த வேண்டும். பத்து மாதங்களுக்கு பின்பே குழந்தை பிறக்கும். இப்பவே பெயர் வைக்க சொன்னால் எப்படி முடியும்? அதிமுக கூட்டணியில் யார், யார் வருகிறார்கள் என்பது தேர்தலுக்குள் தெரியும். தேமுதிக கூட ஒன்றிய அமைச்சர் எல்.முருகனிடம் பேசி கொண்டிருக்கிறார்கள். தேசிய தலைமை அவங்க கூட பேசிட்டு இருக்காங்க.

ஏனென்றால் அவங்க எதிர்பார்ப்பு, பிரச்னைகள் வேற மாதிரியாக இருக்கும். இதை மாநில அளவில் முடிக்க முடியவில்லை என்பதால் அவர்கள் அங்கே பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அது நல்ல விதத்தில் முடியும். அதை அவர்களும் (பாஜ) நாங்களும் (அதிமுக) எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். பாஜக எங்களது கூட்டணியில் தான் உள்ளனர். சாப்பாட்டில் எத்தனை காய்கறிகள் வைத்தாலும் அது அனைத்தும் எங்களது கூட்டணி தான். பாஜ கூப்பிட்டாலும், நாங்கள் கூப்பிட்டாலும் கூட்டணி எங்களுடன் தான். இவ்வாறு கூறினார்.

அவரிடம் நிருபர்கள், ‘‘முன்பெல்லாம் ஜெயலலிதா தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும், தற்போது பாஜ தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா’’ என்று கேட்டதால், ‘‘நீங்கள் நல்லா புரிஞ்சுக்கணும்… நீங்க பிறக்கிறதுக்கு முந்தி பிறந்தவங்க ஜெயலலிதா. ஏதோ விஷயத்தை தெரிந்து கொண்டு பேசுறீங்க. இப்போதும் அதிமுக தான் கூட்டணி குறித்து பேசி வருகிறது. சில முரண்படாத தலைவர்கள் (தேமுதிக) உள்ளனர். மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி கேட்பாங்க… அதனால் அவர்களை அங்கேயே பேச சொல்லி உள்ளோம். முடிவு அதிமுகவிற்குதான் சாதகமாக வரும். எடப்பாடி தான் அத்தனை கூட்டணி கட்சிகளையும் பேசி அழைத்து வந்தார். அதன்பிறகு தான் அன்றைக்கே அமித்ஷா எங்களது கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என அறிவித்து விட்டார். எங்களது கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என சொல்லி விட்டார்’’ என்றார்.

* கண்ணீர் வடிக்கின்றோம்! செங்கோட்டையன் நிலைமை யாருக்கும் வர கூடாது…
‘‘பெரிய மனிதர் தவெக செங்கோட்டையன் பாஜ கூட்டணியில் அதிமுக ஒரு அங்கம் என்று சொன்னால் நாங்கள் என்ன செய்வது? செங்கோட்டையன் விஜய்க்கு புரட்சி தளபதி பட்டம் கொடுக்க வேண்டும் என கூறியதை நினைத்து கண்ணீர் விடத்தான் வேண்டும். எங்களுடன் இருந்த பெரிய மனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார். எனக்கு, செங்கோட்டையனுக்கு என தனியாக தகுதிகள் உள்ளது. சின்ன சின்ன தாளத்தில் அடிப்பார்கள், ஆனால் அண்ணன் செங்கோட்டையன் தாம்பாளத்தில் டம், டம் என்று அடித்து வருகிறார். சர்ச்சில் அடிப்பது போன்று, அப்போதும் செங்கோட்டையனை நாலாவது அல்லது ஐந்தாவது இடத்திலேயே உட்கார வைத்துள்ளனர். எங்களுடன் முதலிடத்தில் இருந்தார். கண்ணீர் வடிக்கின்றோம். எங்களுக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது என்று? அவரது நிலை தாழ்ந்து விட்டது’’ என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Tags : AIADMK ,DMDK ,BJP ,Edappadi ,Vijay ,Dindigul Srinivasan ,Former ,minister ,Dindigul ,BJP alliance ,
× RELATED ஒண்ணுக்கே வழியில்ல… விஜய்யை பொளந்து கட்டிய சண்முகம்