×

சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம் என சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ‘சிறுபான்மையினருக்கான திட்டங்களை இல்லை என்று கூறாமல் நிறைவேற்றித் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி. சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம். இந்த பாராட்டுவிழா எனக்கு கூடுதல் பொறுப்புணர்வை தருகிறது. பெண்கள் என்றாலே அழகுதான். ஆனால் படிப்புதான் பெண்களுக்கு அழகான அணிகலன். சும்மா ஒரு டிகிரி படித்தால் போதாது, ஆர்வமுள்ள துறையில் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க வேண்டும்’ எனவும் உரையாற்றினார்.

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Shri Narendra Modi ,Women's Christian College of Chennai ,
× RELATED 4,582 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்