×

‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி படத்தை தயாரித்த நிறுவனமான கேவிஎன் புரடெக்சன், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, “தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன், ராணுவம், மத நல்லிணக்கம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை குழு தலைவர் அனுப்பியுள்ளார். எனவே, பட தயாரிப்பு நிறுவனம் தங்களது கோரிக்கைகளில் மாற்றம் செய்து தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்து முறையிடலாம்,” என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியுள்ளது. இந்த குழு 20 நாட்களில் படத்தை மறு ஆய்வு செய்து தணிக்கை சான்று தரும்.இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் நேற்று வாபஸ் பெறுவதற்காக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில், வாபஸ் பெறுவதற்காக என்ற தலைப்பில் பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கு, தனி நீதிபதி ஆஷா முன் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.வழக்கு, நீதிபதி ஆஷா முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார். வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : High Court ,Democrat ,Chennai ,Court ,Vijay ,
× RELATED பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு,...