×

நியூசிலாந்து, ஆப்கான் அணிகளுக்கு எதிரான போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் 20,000 பேர் குவிந்தனர்

 

சென்னை: டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் போட்டிகள் இந்தியாவில் சென்னை, சேப்பாக்கம் மைதானம் உள்ளிட்ட 5 மைதானங்களில் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.வழக்கமாக இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் இந்திய அணி விளையாடாத போடிகளுக்கு ரசிகர்கள் வருகை பெரிய அளவில் இருக்காது.

ஆனால் நேர்மாறாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த அணி விளையாடினாலும் ரசிகர்கள் மைதானத்தை நிரப்பிவிடுவார்கள். சென்னை ரசிகர்களைப் பொருத்தவரை இந்திய அணி என்றில்லை எந்த அணி விளையாடினாலும் அதை ஆதரிக்க மைதானத்திற்க்குப் படையெடுப்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் நேற்று நடந்த நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியைக் காண 20,000 ரசிகர்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, சென்னை ரசிகர்கள் நாடுகளை கடந்து விளையாட்டை நேசிப்பதை வெளிப்படுத்துகிறது.

Tags : New Zealand ,Afghanistan ,Chepauk stadium ,Chennai ,T20 World Cup ,India ,Sri Lanka ,Chepauk ,Chennai, New Zealand ,
× RELATED ஆசிய துப்பாக்கி சுடுதல் தமிழ்நாட்டு...