×

டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து போராடி வெற்றி: 4 ரன்னில் கவிழ்ந்த நேபாளம்

 

மும்பை: உலகக் கோப்பை டி20 தொடரின் 5வது போட்டி வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. அப்போட்டியில் இங்கிலாந்து – நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அதன் துவக்க வீரர் பில் சால்ட் ஒரு ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 26லும் பின் வந்த டாம் பேன்டன் 2 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இணை சேர்ந்த ஜேகப் பெத்தேல், கேப்டன் ஹேரி புரூக் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இந்த இணை 4வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் குவித்த நிலையில், 14வது ஓவரில் பெத்தேல் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். 16வது ஓவரில் சாம் கர்ரன் 2 ரன்னிலும், 17வது ஓவரில் கேப்டன் ஹேரி புரூக் 32 பந்தில் 53 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி நேரத்தில் ஆடிய வில் ஜாக்ஸ் ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 39 ரன் விளாசினார். 20 ஓவரில் இங்கிலாந்து 7 விக்கெட் இழந்து 184 ரன் குவித்தது. பின் ஆடிய நேபாளத்தின் துவக்க வீரர் குஷால் புர்தெல் 29, ஆஸிப் ஷேக் 7 ரன்னில் அவுட்டாகினர்.

பின் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடி ரன் வேட்டையில் ஈடுபட்டதால் ஆட்டம் விறுவிறுப்பாக காணப்பட்டது. கேப்டன் ரோகித் புவுதெல் 39, தீபேந்திர சிங் 44, லோகேஷ் பாம் ஆட்டமிழக்காமல் 39 ரன் எடுத்தனர். 20 ஓவரில் நேபாளம் 6 விக்கெட் இழந்து 180 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால், 4 ரன் வித்தியாசத்தில் நேபாளம் பரிதாப தோல்வியை சந்தித்தது. ஆட்ட நாயகனாக 39 ரன் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய வில் ஜாக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Tags : England ,T20 World Cup ,Nepal ,Mumbai ,World Cup T20 ,Wankhede Stadium ,Bill… ,
× RELATED டி20 உலகக்கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து!