×

சென்னை ஓபன் டென்னிஸ் ராகவ் அபார வெற்றி

 

சென்னை: ஏடிபி சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று, இந்திய வீரர் ராகவ் ஜெய்சிங்கானி, சக இந்திய வீரர் ஆதித்யா செந்தில் குமாரை வெற்றி கண்டார். ஏடிபி கோரமண்டல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் இந்திய வீரர்கள் ராகவ் ஜெய்சிங்கானி – ஆதித்யா செந்தில் குமார் மோதினர்.

துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய ராகவ், முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய ஆதித்யா, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 3வது செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய ராகவ், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இதன் மூலம், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற ராகவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : Chennai Open Tennis ,Raghav ,Chennai ,Raghav Jaisinghani ,Aditya Senthil Kumar ,ATP Chennai Open tennis ,ATP ,Coromandel Chennai Open ,
× RELATED டி20 உலகக்கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து!