×

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் மிடுக்காய் ஆடிய ஆப்கனை ஒடுக்கி வென்ற நியூசிலாந்து

 

சென்னை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று, நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.  உலகக் கோப்பை டி20 தொடரின் 4வது போட்டி சென்னையில் நேற்று நடந்தது. அதில், நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கன் பேட்டிங் செய்தது. அதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் துவக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 27, இப்ராகிம் ஜாட்ரன் 10 ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர்.

பின் வந்தோரில் குல்பதீன் நயீப் அட்டகாசமாக ஆடி 35 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்களை வேட்டையாடினார். செதிகுல்லா அடல் 29, டார்விஷ் ரசூடி 20 ரன் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஆப்கன், 6 விக்கெட் இழந்து 182 ரன் குவித்தது. பின்னர், 183 ரன் வெற்றி இலக்குடன் நியூசி. களமிறங்கியது. அதன் துவக்க வீரர் ஃபின் ஆலன் 1 ரன்னில் வீழ்ந்து அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா ரன் எடுக்காமல் வெளியேறினார்.

இருப்பினும் பின்னர் இணை சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் டிம் செபெர்ட், கிளென் பிலிப்ஸ், ஆப்கன் வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த செபெர்ட் 42 பந்துகளில் 65 ரன் எடுத்து அவுட்டானார். கிளென் 25 பந்துகளில் 42 ரன் விளாசி ஆட்டமிழந்தார். பின் இணை சேர்ந்த டேரில் மிட்செல் (14 பந்து, 25 ரன்), கேப்டன் மிட்செல் சான்ட்னர் (8 பந்து, 17 ரன்), சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்ததால், 17.5 ஓவரில் நியூசி. 5 விக்கெட் மட்டுமே இழந்து 183 ரன்களை குவித்தது. அதனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி. அணி அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 65 ரன் விளாசிய செபெர்ட் அறிவிக்கப்பட்டார்.

Tags : New Zealand ,Afghanistan ,T20 World Cup ,Chennai ,World Cup T20 ,
× RELATED டி20 உலகக்கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து!