- கௌரவ் கோகோய்
- பாக்கிஸ்தான்
- அசாம்
- முதல் அமைச்சர்
- சர்மா
- குவஹாத்தி
- துணை முதல்வர்
- காங்கிரஸ்
- மக்களவை
- கோகோய்
- எலிசபெத் கோல்பர்ன்
- அலி தௌகிர் ஷேக்
- ஐஎஸ்ஐ
கவுகாத்தி: அசாம் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் கோகாய் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கோகயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய ஏஜென்ட் அலி தவுகீர் ஷேக் என்பவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கவுகாத்தியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “கோகாயின் மனைவி எலிசபெத் இந்தியா பற்றிய தகவல்களை சேகரித்து, பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் ஏஜென்ட் அலி தவுகீர் ஷேக் 13 முறை இந்தியா வந்து சென்றுள்ளார். இதுகுறித்து விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்தார். இது குறித்து கவுரவ் கோகாய் தன் எக்ஸ் பதிவில், “என் மீதான குற்றச்சாட்டுகள் சி கிரேட் சினிமாவை விட மோசமானது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அறிவற்றது மற்றும் போலியானவை” என குறிப்பிட்டுள்ளார்.
