- திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோயில் நீர்த்தேக்க விழா
- திருவொட்டிரியூர்
- திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோவில்
- திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில் சன்னத் தெரு
- அகத்தீஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோயில் நடந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் சன்னதி தெருவில் வடக்கு திசையில் நோக்கி அகத்தீஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. உலகம் சமநிலை பெற வேண்டும் என்று அகத்திய முனிவர் குபேர லிங்கத்தை திருவொற்றியூரில் கொண்டு வந்து ஸ்தாபித்த நிலையில் குபேரலிங்கம் மூலவர் அகத்தீஸ்வரராகவும் அம்பாள் அகிலாண்டேஸ்வரி வீரபத்திரர் பத்ரகாளி அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளது.
இந்நிலையில், அறநிலையத்துறை சார்பில் அகத்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா கடந்த 2ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. யாகசாலையில் மூன்று கால பூஜை முடித்து நான்காம் கால பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாக கலசத்தை யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள், கைலாய வாத்தியம் முழங்க கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அறங்காவலர் பாலமுருகன், உதவி ஆணையர் நர்சோனை உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
