- 1962 இந்தியா-சீனா போர்
- ஐரோப்பிய ஒன்றிய
- அமைச்சர்
- ராகுல் காந்தி
- புது தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- இந்திய இராணுவம்
புதுடெல்லி: 1962ம் ஆண்டு நடைபெற்ற இந்திய – சீன போரின் ரகசிய அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1962ம் ஆண்டு நடைபெற்ற இந்திய – சீன போரின் போது இந்திய ராணுவம் சந்தித்த பின்னடைவுகள் குறித்து ஆய்வு செய்ய லெப்டினன்ட் ஜெனரல் ஹென்டர்சன் புரூக்ஸ் மற்றும் பிரிகேடியர் ஜெனரல் பிரேமிந்திர சிங் பகத் ஆகியோரால் ஒரு விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. அன்றைய ராணுவ தளபதி சவுத்ரியின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட இந்த அறிக்கை, அப்போதைய நேரு தலைமையிலான ஒன்றிய அரசின் தோல்விகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டியதால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப்பகுதிக்கு சென்று வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய எல்லைப்பகுதியின் தற்போதைய அபரிமிதமான வளர்ச்சியை கண்டு அனைவரும் பெருமிதம் கொள்வார்கள் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, முன்னாள் ராணுவ தளபதி நரவணே எழுதிய இன்னும் வெளியிடப்படாத நூலின் குறிப்புகளை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கோள் காட்ட முயன்றது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிரண் ரிஜிஜு, ‘ஒன்றிய அரசு முதிர்ச்சியடைந்த தலைவரால் வழிநடத்தப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான 1962ம் ஆண்டு போர் அறிக்கையை ஒருபோதும் அரசியல் கருவியாக பயன்படுத்த முடியாது. லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியது ராணுவத்தின் மன உறுதியை குலைக்கும் செயல். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளிக்கு இடையே பிரதமர் மோடி பேசுகையில், சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் வாரிசு அரசியல் தலைவர்கள் செயல்படுகின்றனர்’ என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
